இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி டிசம்பர் 2 முதல் பணியைத் தொடங்குகிறார்

டில்லி

ந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாகத் தேர்வு செய்யப்பட்ட ஷிவாங்கி பயிற்சி முடிந்ததால் டிசம்பர் 2 முதல் பண்யை தொடங்க உள்ளார்.

 

இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாகப் பீகாரைச் சேர்ந்த ஷிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முசாபர்பூரை சேர்ந்தவர். அவர் தனது பள்ளிப்படிப்பை முசாபர்பூர்நகரில் உள்ள டி ஏ வி பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார்.   அவர் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாகச் சேர்ந்தார்.

எழுமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் கடந்த வருடம் ஜூன் மாதம் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.    ஏற்கனவே விமான போக்குவரத்து அதிகாரிகள் பதவியில் சில பெண்கள் பணி ஆற்றி உள்ளனர்.  ஆனால் முதல் பெண் விமானி ஷிவாங்கி ஆவார். ஆகவே அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தற்போது பயிற்சிகள் முடிந்துள்ளதால் அவர் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல்  பணியைத் தொடங்க உள்ளார்.  டிசம்பர் மாதம் நான்காம் தேதி அன்று கடற்படை தின விழா நடக்க உள்ள நிலையில் அதற்கு இரு தினங்கள் முன்பு கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி பணியைத் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

You may have missed