1400480259_rama

மீபத்தில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் நமது patrikai.com இதழுக்கு அளித்த பேட்டியில், “மாட்டுக்கறி திண்ணக்கூடாது.. மனித மலத்தை வேண்டுமானால் உண்ணட்டும்!” என்றும் “இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களை இந்துக்கள் வெட்டிக்கொன்றுவிடுவார்களோ என அஞ்சுகிறேன்” என்று கூறியதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் ராம.கோபாலன் கருத்துக்கு பதில் அளிக்கிறார் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன்:

07-kali-poongundran-200g“ராம. கோபாலன் கூறியிருக்கும் இரண்டு கருத்துக்களுக்கும் எளிய முறையிலேயே பதில் சொல்லிவிடலாம்.

இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று இவர் ஏன் ஆத்திரப்பட வேண்டும்? அடுத்த மதத்தினரின் எண்ணிக்கையைப் பற்றிக்கவலைப்படாமல், மனிதனாக வாழ்வது பற்றி சிந்திக்கலாமே.

சரி, பிற மதம் வளர்ந்தால் தனது இந்து மதம் செல்வாக்கு இழக்குமோ என்று பயப்படுகிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

இந்து மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டர்களையும், பார்ப்பனர் அல்லாதவரா்களையும் இந்த பார்ப்பனர்கள் எப்படி நடத்துகிறார்கள்?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு ஓடுகிறது பார்ப்பனக்கூட்டம். இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தால், கோர்ட்டுக்கு ஓடினவர்களிடம் வழக்கை திரும்பப்பெறச் சொல்ல வேண்டியதுதானே!

தங்களைத் தவிர வேறு யாரும் கோயில் கருவறைக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தள்ளிவைக்கிறார்கள்.

கிறித்துவ இஸ்லாமிய மதத்தினர் வேறு எங்கிருந்தும் வரவில்லை. ராம.கோபாலன் போன்ற பார்ப்பனர்களின் கொடுமை தாங்க முடியாமல், அந்த மதங்களுக்கு மாறியவர்கள்தான் அவர்கள்.

ஆக, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த பார்ப்பன ராமகோபான்கள்தான்.

அடுத்ததாக, “மாட்டுக்கறி உண்ணாதீர்கள். மனித மலத்தைத் திண்ணுங்கள்” என்கிறார்.

மகாவிஷ்ணுவின் அவதாரம் வராஹி. அதாவது பன்றி.   அது என்ன திண்ணும் என்பது அனைவருக்கும் தெரியும்.  அதைவைத்து அப்படிப் பேசியிருப்பார்!”