இந்தோனேசியாவில் நில நடுக்கம்! வீடுகள் இடிந்தன!

இந்தோனேசியா-கனமழைக்கு-11பேர்-உயிரிழப்பு

திமோர்:

ந்தோனேசியாவில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. உயிர்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.  கடல் அலைகள் உயரமாக எழுகின்றன. ஆனாலும்  சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  அங்குள்ள குபாங் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின.  உறங்கிக்கொண்டிருந்த மக்கள்  பீதி அடைந்து  அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.
5.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் இந்தோனேசியா உள்ளது. ஆகவே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.  இதற்கு முன்பு கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது.

கடந்த 2013 ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 thought on “இந்தோனேசியாவில் நில நடுக்கம்! வீடுகள் இடிந்தன!

Leave a Reply

Your email address will not be published.