இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன்!

--

லக்னோ,

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவை 21 – 13, 21 – 14 என்ற நேர் செட்கணக்கில் பி.வி.சிந்து வென்றார்.

இது பி.வி.சிந்து வென்ற முதல் சையத் மோடி சாம்பியன் பட்டமாகும்.

ஆண்கள் பிரிவில் சாய் பிரணீத்தை வென்று தேசிய சாம்பியனான சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கலப்பு இரட்டையர் போட்டியில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, அஸ்வினி பொன்னப்பா-சுமீத் ரெட்டி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.