இந்த வார தமிழ் சினிமா முதல் நாள் வசூல் நிலவரம்

மிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவமிக்க சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, விஐய் சேதுபதி, மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்த படங்கள் வியாழன் ( சீதக்காதி மட்டும்) வெள்ளிகிழமைகளில் வெளியானது.

சீதக்காதி, மாரி – 2, அடங்க மறு, கனா, சிலுக்கு வார்பட்டி சிங்கம், இதில் சீதக்காதி, அடங்க மறு படங்களை தவிர்த்து உள்ள மூன்று படங்களும் அதில் நடித்து உள்ள நடிகர்களின் சொந்த தயாரிப்பு.

இந்த படங்களின் முதல் நாள் வசூல் என்ன என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது கிடைத்த தகவல்களும்.

மாரி – 2.

தயாரிப்பாளர்கள் சங்க கட்டுப்பாட்டை மீறி, சிவகார்த்திகேயனின் கனா படத்துக்கு போட்டியாக களமிறங்கிய படம் மாரி – 2
படத்தில் கதாநாயகன் தனுஷ்மிகப் பெரும் பில்டப்புக்கு பின்படத்தில் அறிமுக காட்சியில் தோன்றுவார்.

நேற்றைய தினம் திரையரங்குகளில் இந்த பில்டப் கொடுக்கிற அளவுக்கு ஓபனிங் இல்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்..

தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களில் மாரி – 2 ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.  படத்தின் திரைக்கதைபோன்றுவசூலும்மந்தமாக இருந்தது.
முதல் நாள் தமிழகத்தில் மொத்த வசூல் சுமார் 4.68 கோடி ரூபாய்என்கிறது தியேட்டர் வட்டாரம்.

கனா.

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து இருக்கும் படம் “கனா ” இப்படத்தில் சிவகார்திகேயன், கெளரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.மாரி – 2, அடங்க மறு படங்களை தவிர்த்து வசூல் அடிப்படையில்மூன்றவது இடத்தில் இருக்கிறது” கனா படம். தமிழகத்தில் முதல் நாள் கனா மொத்த வசூல் சுமார் 1 .28 கோடி ரூபாய்.

சீதக்காதி :

விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என தொடர்ந்து பிரச்சாாரம் செய்யப்பட்டு வந்த சீதக்காதியில்  படம் நெடுக விஜய் சேதுப்தி நடிக்கவில்லை என்கிற செய்தி ரசிகர்களுக்கு தெரிந்த காரணத்தால் படத்திற்குஒபனிங்  இல்லை.

இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மொத்த வசூல் 65 லட்சம் ரூபாய்.விஜய் சேதுபதி நடித்த படங்களின் முதல் நாள் மொத்த வசூல் சராசரியாக 4 கோடி இருக்கும். சீதக்காதி யில் விஜய் சேதுபதி கெளரவத் தோற்றம் என்பதால் வசூல் குறைந்திருக்கிறது.

சிலுக்குவார்பட்டி சிங்கம் :

விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும்படம். தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் ரீலீஸ் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் சுமார் 21 லட்சம் ரூபாய்.

அடங்க மறு:

ஜெயம் ரவி நடித்துள்ள இப்படத்தைரீலீஸ் செய்ய பல முறைமுயற்சித்தும் தியேட்டர் பிரச்சினையில், பைனாான்ஸ் பஞ்சாயத்துகளால்தேதி மாறிக் கொண்டே இருந்தது.


மாரி – 2விட குறைவான தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் தமிழகத்தில் முதல் நாள் மொத்த வசூல் 2.18 கோடி

விடுமுறையை குறிவைத்து களமிறங்கிய ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆரோக்கியமாக இல்லை.

படைப்பு ரீதியாக மீடியாக்களால்பாராட்டப்பட்ட சீதக்காதி, கனா இரு படங்களும் நட்சத்திர அந்தஸ்து இருந்தும் வசூல் ரீதியாக தோல்வியடைந்திருக்கின்றன.

மசாலா படமான மாரி ஆர்பாட்டத்துடன் வந்திருந்தாலும் வழக்கமாக தனுஷ் படங்களுக்கு இருக்கும் முதல் நாள்வசூல் மாரி – 2 படத்திற்கு இல்லை.

சமீபத்தில் ராட்சசன் என்ற வெற்றி படத்தில் நாயகனாக நடித்திருந்த விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் வசூலில் நரியாகி போனது.

– சினி ராம்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Comparison, Dhanush, Film collection, Jeyam Ravi, siva karthikeyan, vijay sethupathi!
-=-