இன்று: அண்ணா பல்கலை உருவான தினம்

new university

 

1978 ஆம் ஆண்டு,  இதே நாளில்தான்  அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது.   சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக விளங்கிய  கிண்டி பொறியியல் கல்லூரிஅழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரிமெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து  “ பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்” உருவாக்கப்பட்டது.

  • பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டுஅண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றி அமைக்கப்பட்டது
  • 2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன.