WorldToiletDay-415x260
வம்பர் 19ம் தேதி  உக கழிவறை   தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.  இதற்கு ஒரு தினம் தேவையா என்று பலர் நினைக்கக்கூடும்.

யுனிசெஃப் சர்வேயின் படி  உலகிலேயே இந்தியாவில்தான் கழிவறை  வசதி இல்லாத மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  அதாதவது,  818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிவறையாக பயன்படுத்துகிறார்கள்.    இதனால் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி 50 கொடிய நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளதாக  கண்டறிந்துள்ளனர்.

இப்போது தெரிகிறதா கழிவறை தினத்துக்கான அவசியம்?

அது மட்டுமல்ல…  இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த  போதிய கழிவறை  வசதி இல்லாத பள்ளிகளே காரணமாக அமைகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை கிடையாது.

பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இருக்கும் பொதுக்கழிவறைகளில் சுகாதாரம் கிடையாது. தவிர ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை இடத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆகவே பெரும்பாலான மக்கள் பொதுக்கழிவறையை பயன்படுத்த தயங்குகிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை!