இன்று: கல்கி சொல்லும் சேதி

kalki new

ல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது.

நவசக்தி, விகடன், கல்கி என்று முழுநேர பத்திரிகையாளராகவே வாழ்ந்த கல்கி, தனக்கான கொள்கை என்பதில் உறுதியாக இருந்தார்.

இன்று ஊடக சுதந்திரம் என்பது இரு தரப்பையும் “சமமாக மதிப்பது” என்பதாக சிலரால் சொல்லப்படுகிறது. அடிபட்டவன், அடித்தவன்.. இருவரையும் “சமநோக்கில்” நோக்கும் மனநிலை என்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் அமரர் கல்கி, அந்த வகையான “நடுநிலை” பத்திரிகையாளராக இல்லை.

தன் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளை அரசை முழு வீரியத்தோடு எதிர்த்தார். எழிதினார். சிறை சென்றார்.

அது மட்டுமல்ல.. “ எல்லா மொழியும் ஒன்றுதான்” என்கிற “சம நோக்கும்” அவரிடம் இல்லை.

ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருந்தாலும், தாய்மொழியாம் தமிழை மிக நேசித்தார். தமிழிசைக்காக அமரர் கல்கி செய்த தொண்டு அளப்பரியது.

அந்த அளவுக்கு தாய் மொழி மீதும், தாய்நாட்டின் மீதும் பற்று கொண்டிருந்தார் கல்கி.

அவரது பிறந்த தினமான இன்று நாம் மனதில் கொள்ள வேண்டிய செய்தி இதுதான்.

Leave a Reply

Your email address will not be published.