இன்று சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் ரெயில் சேவை மாற்றம்

சென்னை

ராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே ரெயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 முதல் பகல் 2.35 மணி வரை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இருப்புப் பாதை  பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதை ஒட்டி இந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில் சேவையில் இன்று ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணி முதல் மின்சார ரயில் வழக்கம் போல செல்லும்.

வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணி முதல் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்குகிறது.