சி.பி. முத்தம்மாள்
சி. பி. முத்தம்மா  பிறந்தநாள் (1924)
, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா,  என்ற  பெயர் கொண்ட சி.பி. முத்தம்மா, இந்திய பெண்களின் முன்னோடிகளுள் ஒருவராக திகழ்ந்தவர்.
இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.)  வெற்றியடைந்த முதல் பெண் இவர்.  இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தார்.
இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்
குறிப்பாக, வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) பெண்களுக்கு எதிராக இருந்தது. திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று  இந்த சட்டப்பிரிவு வலியுறுத்தியது.  திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகளால்,  வெளியுறவுத்துறையில்  சிறப்பாக செயல்படவில்லை என்று அரசு கருதினால், அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்தித்தது அந்தப் பிரிவு.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடுத்து வென்றார் முத்தம்மா.
32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார் முத்தம்மா.
12549042_1009562225768747_7168187906473964506_n

 திருமலை நாயக்கர் பிறந்த நாள்
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டில்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து  அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைப்போலவே திருமலை நாயக்கர் கட்டிய நாயக்கர் மகால் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்குகிறது. கள்ளழகர் உலா துவங்கியது இந்த மன்னரின் காலத்தில்தான். கட்டடக் கலையில் மதுரையை சிறந்த நகராக்கிய பெருமை மன்னர் திருமலை நாயக்கரையே சாரும்.

 
download (1)
 
சர்ச்சில் நினைவு நாள் (1965)
சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் என்கிற சர்ச்சில், இங்கிலாந்தின் புகழ் மிக்க பிரதமர்களில் ஒருவர்.  இங்கிலாந்தி பிரதமராக,  1940முதல் 1945 வரையும்,  1951 முதல் 1955 வரையும் பதவி வகித்தார்.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பொறுப்பு வகித்தை, திறம்பட நாட்டை ஆண்டவர் என்று இங்கிலாந்து மக்கள் இவரை புகழ்கிறார்கள்.
இவர் மிகச் சிறந்த பேச்சாளர். பிரிட்டன் ராணுவத்தில் பணி புரிந்தவர்.
இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே. அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.
அதே நேரம், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் இவர்.  நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில்  இணைந்தவர்களில் பெரும்பாலோர்,  மலேசிய இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள்தான். அவர்களை கேலி செய்யும் பொருட்டு,  “மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம், நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.” என்றார்.
அதற்கு நேதாஜி, “ அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்” என்று பதிலடி கொடுத்தார்.
 
homi-bhabha
 
ஹோமிபாபா நினைவு நாள் (1966)
1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த ஹோமிபாபா, . சிறு வயதிலேயே  அறிவியல் புத்தகங்களை விரும்பிப்படித்தார். பிறகு இங்கிலாந்து சென்று பொறியியல் படித்தார். உயர் படிப்பு முடித்து  1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு  ஓமியும் ஹைட்லர் என்ற ஜெர்மானிய இயற்பியலாளரும்  அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வு  அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.
இந்தியா திரும்பிய பாபா, , பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.
அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார் பாபா.  இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப்பேற்றார்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரிய ஆரம்பித்தார்கள்.
இந்தியாவில் அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் பாபா.  இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.
இவரது முயற்சியால் இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
1955ல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார் பாபா.
1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார்.