Warning: sprintf(): Too few arguments in /mnt/stor14-wc1-dfw3/www.patrikai.com/web/content/wp-content/themes/covernews/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

இன்று: ஜனவரி 30

--

download

 

மகாத்மா காந்தி நினைவுதினம் (1948)

மகாத்மா காந்தியின் வாழ்க்கை, சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கு ஆகியவற்றை நாம் நிறைய அறிந்திருக்கிறோம். அவரது நினைவு நாளான இன்று தியாயகிகள் தினமாக   கடைபிடிக்கப்படுகிறது.

அவரது பொன் மொழிகளும் புகழ் பெற்றவை. அவற்றில், தன்னடக்கம் பற்றி அவர் கூறியதை பார்ப்போம்.

“தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதுதான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை வெளிக் காட்டுவது தான் தற்காப்புக் கலை. இதைத்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

உண்மையான தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும்.  அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன் வளர்ந்து கொண்டே போகிறான்.

என் உடலுழைப்பாலும், மூளையுழைப்பாலும் வெளிப்படும் சக்தியையும், வேகத்தையும் நேரில் பார்த்தவர்கள் அவை அதிசயிக்கத்தக்கவை என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள். அதற்கு மூல காரணமானதும், நீண்ட காலமாக நான் நோய்க்கு ஆளாகாமல் ஆனந்தம் அனுபவித்து வருவதற்கும் காரணம் தன்னடக்கமே என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.

நமது இன்றையச் சமுதாய அமைப்பில் தன்னடக்கத்தை வளர்க்கும்படியான வசதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை. நம்முடைய வளர்ப்பு முறையே அதற்கு எதிராக இருந்து வருகிறது.
தன்னடக்கச் சக்தியானது பெண்களைவிட ஆண்களிடமே குறைவாகக் காணப்படுகிறது.தன்னடக்கத்தைப் பயில்வது ஆணைவிடப் பெண்ணுக்கு வெகு சுலபம்.

எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற் படியாகும்.

 

download (2)

ரூஸ்வெல்ட் பிறந்தநாள் (1882)

 

 அமெரிக்காவின் 32வது  குடியரசு தலைவராக பதவி வகித்தவர் பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்.  அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகிய சிக்கலான காலகட்டத்தில் அமெரிக்காவை வழி நடத்தியவர்.  இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.

download (1)

 

சி.சுப்பிரமணியம் பிறந்தநாள் (1910)

சி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் சி. சுப்பிரமணியம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவர் அரசியலைமைப்பு சட்டமன்றத்தில்உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலைமைப்பு சட்டம் இயற்றுவதில் பங்காற்றினார்.

இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சராகப் பணி புரிந்தநேரம் அதிக மகசூல் தரும் விதைகளையும் உரங்களையும் ஈடுபடுத்துவதில் ஆர்வம் காட்டினார். இதனால்  1972ஆம் ஆண்டு மிகக் கூடுதலான கோதுமைவிளைச்சல் கிடைத்தது. இது பசுமைப் புரட்சி என புகழப்படுகிறது. அதுவரை பிற மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையிலிருந்து மாறி,  உணவு தன்னிறைவு எய்தியது.

download (3)

 

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் தேதி உலக தொழுநோய் ஒழிப்பு தினம்  கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய உலகில் பெரிய வியாதி என்பது தொழு நோய் அல்ல. ஆனாலும், அது குறிந்த தேவையற்ற பயம், மனிதர்களை தேவையில்லாமல் கவலைக் கொள்ள வைக்கிறகிது என அன்னை தெரசா ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தியாவில் கி.மு 600 ஆம் ஆண்டுக்கு முன்பே தொழு நோய் இருந்திருக்கிறது. பாவம் செய்தால்தான் தொழு நோய் வரும் என்று நம்பட்டது. மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.

தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மிக முக்கியமான விசயம், தொழு நோய் பீடித்தவர்களை, சமூகத்தில் இருந்து ஒதுக்காமல் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.