1சை என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள்தா் என்று இருந்த காலகட்டத்தில், தமிழ்ப்பாடல்களின் பெருமையை உணர்த்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.

எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர். என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம் |ஆகியோர், எஸ்.எஸ். சுப்புலட்சுமியை, “சேவாசதனம்” படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இவர் நடித்ததில் மீரா திரைப்டம்  மிகவும் புகழ்பெற்றது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ள எம்.எஸ், உலகின் பல நாடுகளுக்கும் பாரதத்தின் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் இந்திய பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத வெகுமதியாக உலக அமைதிக்காக, எம்எஸ் ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார்.

1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவரது பிறந்தநாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed