இன்று: 1 : எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பிறந்தநாள்

ooo

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்தநாள் இன்று.

தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களிலும் படைப்புகளை அளித்தவர். தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார்.

இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினை அலசுவதாக இருக்கும்.

புகழ் பெற்ற இவரது குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் ஒளிபரப்பாயின. சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.