z

டந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக தமிழகம், புதுவையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருள்சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர். ஆண்டுதோறும் இந்த நாள் டிசம்பர் 26-ம் தேதி  சுனாமி நினைவு தினமாக நினைவுகூறப்படுகிறது.

சுனாமி பேரழிவு ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்  11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மக்கள் ஆங்காங்கே மெழுகு வத்தி ஏந்தியும், கடற்கரையில் மலர் துôவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

சுனாமியால் உயிரிழந்த நம் உறவுகளுக்கு இன்று அஞ்சலி செலுத்துவோம்.