இன்று: 3 : உலக மலைகள் தினம்

mount_meru

நமது வாழ்க்கையில் மலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. உலகத்திற்கு தேவையான தூய நீரை மழையின் மூலமாக வழங்குவதுடன், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும்  விலங்குகளினதும்  வாழ்விடங்களாக இருப்பது மலையே. அது மட்டுமல்ல..  பழங்குடி மக்களின் வாழிடமாகவும்  இவை விளங்குகின்றன.

காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல்,  கற்பாறைகளை வெடித்து தகர்ப்து , மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களினால் மலைகள் அழிந்து வருகின்றன என்பது சோகமான உண்மை. .

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 11ம் நாள் உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.