இன்றே கடைசி: வருங்கால வாக்காளர்களே முந்துங்கள்!

youth-vote

ருங்கால முதல்வர்கள் பலர் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களைவிட முக்கியமானவர்கள் வருங்கால வாக்காளர்கள். அந்த வாக்காளர்களுக்கான வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள். மேலும் வாக்காளர் பட்டி யலில் நீக்க, திருத்தம் செய்யயவும், இன்றுதான் கடைசி நாள்.

தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய இன்று (அக்டோபர் 24-ம் தேதி) வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இன்று அலுவலக விடுமுறை நாள் என்பதால், இணையம் மூலம் பெயர்களை சேர்க்கலாம் அல்லது திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதளம்  அல்லது EASY என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இணைய தளம்:

http://elections.tn.gov.in/searchid.htm

 

Leave a Reply

Your email address will not be published.