12249998_200734726925686_2381440514891260195_n

மிழ்த்திரையுலகில் பிரபலமாக விளங்கிய இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இன்று மறைந்தார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நட்டத்திர நடிகர்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவர் இவர்தான்.

1960களில் வெற்றிகரமான இயக்குநராக புகழின் உச்சியில் இருந்தார். இவர் இயக்கிய படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டன.

பின்னாட்களில் கமலஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார்.

பெண்களின் பெருமையை உணர்த்தும் குடும்பப் படங்களை இயக்கினார். புரட்சிகரமான கருத்துக்களை அளிப்பதிலும் இவர் பின் தங்கியதில்லை. எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி நடித்த சாரதா இதற்கு ஒரு உதாரணம்.   விபத்தினால் ஆண்மையை இழந்து விட்ட கதாநாயகன் தனது காதல் மனைவிக்கு புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டி அவளை மறுமணத்திற்கு வற்புறுத்துவதான கதை, இந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்தாக அமைந்து பரபரப்பாகப் பேசப்பட்டது

கதாபாத்திரங்களின் குண இயல்புகளைச் சித்தரிப்பதில் மிகவும் வல்லவர். சித்தி திரைப்படத்தில் பத்மினி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் சாவித்திரி ஆகியோரின் கதாபாத்திரங்களை உதாரணமாக கூறலாம்.

டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் ரஷ்ய நாவலைத் தழுவி பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை தழுவி தமிழில் இவர் எடுத்த திரைப்படம் “என்னதான் முடிவு” என்ற படம்.

கே.எஸ்.ஜி. அவர்களுக்கு நமது அஞ்சலிகள்!