இயல்பு நிலை திரும்புதாம்… சொல்லுது செயா டிவி!

12346366_10207658269552288_8736405613751342089_n
டுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதிகள், குறிப்பாக சென்னை கடலூர்  உள்ளிட்ட பகுதி மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசு உரிய நடவடிக்கவில்லை என்கிற ஆதங்கம் மக்களுக்கு இருக்கிறது. இதன் எதிரொலியாக அமைச்சர்களை முற்றுகையிட்டு பல பகுதிகளில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆளும்தரப்புக்கு ஆதரவான ஜெயா டிவியில், “ வெள்ளப்பகுதியில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது” என்று செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மக்கள், ஆளும்கட்சி மீது மேலும் ஆத்திரம் கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.