இலங்கை: முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது

1

கொழும்பு:

லங்கையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் 2005-ம் ஆண்டு நத்தார் பிறப்பு வழிபாட்டின்போது தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவரை, 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

 

2

இலங்கையின் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை நடந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த பிள்ளையான், கிழக்கு மாகாணசபைக்கான முதல்வரானார். 2008 முதல் 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.

அதன் பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.