velusamy-interview

ங்கள் தலைவியை அவமானப்படுத்தும்படியாக பேசிவிட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தமிழகம் முழுதும் எரித்து வருகிறார்கள் அதிமுகவினர். தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவன் மீதும் தாக்குதல் நடந்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பி, மேயர்கள் தலைமையில் இந்த அதிரடிகள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியை சத்யமூர்த்தி பவனில் சந்தித்தோம். சமீபத்திய பிரச்சினை குறித்து நாம் கேள்வி எழுப்பும் முன்பே ஆவேசமாய் பேச ஆரம்பித்தார் வேலுச்சாமி:

“ஜெயலலிதா பற்றி..இளங்கோவன் பேசியதால, தமிழ்நாட்டோட கலாச்சாரமே போயிடுச்சு.. தமிழ்ப்பண்பாடே சீரழிஞ்சிடுச்சி என்று கூப்பாடு போடுறாங்களே… இந்த ஜெயலலிதாவோட யோக்யதை என்ன..? ” நான் சோபன்பாபுவுடன், தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்கிறேன். வெளிநாட்டில் இதை கோயிங் ஸ்டடி என்பார்கள். அப்படி, விரும்பியவருடன், விரும்பியபடி வாழ்வது என்ன தவறு…?” என்று பகிரங்கமாக ஒரு வார இதழில் பேட்டி கொடுத்தவர்தான் இந்த ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஜெயலலிதாவை ஆதரிக்கிறவனுக்கும், தமிழ்ப்பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?”

velusamy-interview1

திருமணம் என்பது பெண்களை அடிமைப்படுத்தக்கூடிய ஏற்பாடு என்பது முற்போக்காளர் கருத்து. சமீபத்தில் உச்ச நீதிமன்றம்கூட வயதுவந்த இருவர் சேர்ந்து வாழலாம் என்று கூறியிருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கையை ஜெயலலிதா வாழ்ந்திருந்தால் என்ன தவறு?

(சிரிக்கிறார்) ஓ.. அதுதான் புரட்சி தலைவி என்று அழைக்கிறார்களோ..? (சற்று இடைவெளிவிட்டு) திருமணம் செய்துகொள்ளாமல் ஒருவருடன் மட்டும் வாழ்ந்தால் தவறில்லை.. ஆனால் சோபன்பாபுவுக்குப் பிறகு…?

ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? இளங்கோவனின் பேச்சையும்தான் சொல்கிறேன்.

சரியான கேள்வி. ஜெயலலிதாவும், மோடியும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக அறிவித்திருந்தால் அது பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் முதல்வரும் பிரதமருமாக சந்திக்கும்போது என்ன பேசினார்கள் என்பதை வெளிப்படையாக சொல்வதுதானே முறை? ஆகவேதான் அதில்என்ன ரகசியம் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே என்று இளங்கோவன் கேட்டார். அதில் தவறில்லை.

ஆனால் “ பேச முடியாதவர்கள் ஐம்பது நிமிடம் என்ன செய்தார்கள்” என்று இளங்கோவன் பேசியது .. எதிரே இருந்தவர்களின் கிண்டலாக சிரித்தவுடன்“ தவறாக நினைக்காதீர்கள். அப்படி எதுவும் நடந்திருக்காது. இருவரும் வயதானவர்கள்” என்று அவர் சொன்னது… இப்படியெல்லாம் பேசியது நாகரீகம்தானா..

தமிழில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட அர்த்தம் உண்டு. ஆகவே தனது பேச்சை வேறு மாதிரி கூட்டத்தினர் புரிந்துகொண்டார்களோ என்று, “தவறாக நினைக்க வேண்டாம். இருவரும் வயதானவர்கள்” என்று இளங்கோவன் பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல.. “நான் தவறாக பேசவில்லை. எனது வார்த்தைகள் சிலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என்றும் இளங்கோவன் சொல்லியிருக்கிறார்.

அதே நேரம்..

(குறுக்கிட்டு) இருங்க… “யுவர் சில்ரன் அண்ட் மை சில்ரன் ஆர் ப்ளேயிங் வித் அவர் சில்ரன்” என்பது மேலைநாட்டு கலாச்சாரம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நமது கலாச்சாரம். அந்த மேலை நாட்டில் பிறந்தது வளர்ந்து… ஆனால் காதலித்த கணவனை கைபிடித்து இங்கு வந்தவுடன் இந்த மண்ணுடையை கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முழுமையா உள்வாங்கிக்கொண்டு தன் காதல் கணவன் மறைந்த பிறகும் இந்த மண்ணோடும் மக்களோடும் தன்னை முழுமையாய் பிணைத்துக்கொண்டு ஒரு நேர்மையான நியாயமான பாரத திருநாட்டின் மருமகளாக வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய சோனியாவை… விரும்பியவர்கள் விரும்பியபடி வாழலாம் என்று சொன்ன ஜெயலலிதா கேட்டாரே.. “பதி பக்தி இருக்கிறதா” என்று..! இன்னைக்கு நம்ப பாரம்பரியம் போச்சு என்று குதிக்கிறவங்களுக்கு அன்றைக்கு கோபம் வந்திருக்கணும்..!

இன்னொரு விசயம்… 1989 தேர்தல் நேரம்… அப்போ திமுகவுல இருந்த நடிகர் ராதாரவி பேசுறார்.. அதாவது, “ எங்க தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு முதல்வராவதற்கு ஒரு யோக்கியதை வேண்டாம்.. ஜட்டியோடு குலுக்கு டான்ஸ் ஆடினவ எல்லாம் முதல்வராக முயற்சி பண்ணலாமா” என்று கேட்டார். கூடியிருந்த கூட்டம், சிரித்தது. உடனே ராதாரவி, “ஏன் சிரிக்கிற.. ஐநூறு ரூபா உன் பாக்கெட்ல இருந்தா அவ இன்னைக்கு உனக்கு சொந்தம்.. அதே ஐநூறு ரூபா என் பாக்கெட்ல இருந்தா எனக்கு சொந்தம்” என்றார். அந்த பேச்சை உள்ளடக்கிய ஆடியோ கேசட்டை இன்றும் பலபேர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த ராதாரவி மேல ஜெயலலிதா வழக்கு போடலை. தன் கட்சியில சேர்த்துகிட்டு தேர்தல்ல நிறுத்தி எம்.எல்.ஏ. ஆக்கினார்! அப்படியானால் ராதாரவி உண்மையைத்தான் பேசினார் என்று ஒப்புக்கொள்கிறாரா ஜெயலலிதா? இந்த ஜெயலலிதாவும் எப்படி எப்படி எல்லாம் பேசினார்… எம்.ஜி.ஆர் மறைந்த போது, ஜானகிதான் மோரில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்றார். பிறகு, முதல்வரானவுடன், “கவர்னர் சென்னாரெட்டி என் கையைப்பிடித்து இழுத்தார்”என்றார். இப்படிப்பட்டவரின் மானம்தான் இளங்கோவன் பேச்சால் போய்விட்டதாம். தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்கிறார்கள்.

சரி.. தங்கள் தலைவியை தவறாக பேசிவிட்டார்களே என்ற ஆதங்கமாக இருக்குமோ ..?

அதெல்லாம் கிடையாது.. இன்று ஜெயலலிதாவுக்காக தெருவில் இறங்கி போராடுற எவனுக்கும் அதிமுகவுடனோ எம்ஜிஆருடனோ சம்பந்தமே கிடையாது. “விளைந்த காட்டு குருவி” என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க.

அதாவது இரைக்காக வயல் வயலா அலையிற குருவி என்று அர்த்தம். அப்படித்தான் இவர்கள். இன்றைக்கு அதிகமாக கூவுகிறவர்கள், நவநீத கிருஷ்ணன், நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி, பழ கருப்பையா இவங்கதான். இவங்களுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பநந்தம்.. இவங்க நாலுபேரும் கடந்த காலத்தில் ஜெயலலிதா பற்றி என்னென்ன பேசியிருக்காங்க… அப்படிங்கிறத நான் சொல்லாமா..

அவங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஜெயா டிவியில் பேச என்னைக் கூப்பிடட்டும். நான் வந்து பேச தயார். பேட்டி எடுக்க தயாரா..? எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா கஷ்டப்பட்ட போது இவர்களில் யாராவது அவருக்கு உதவியா இருந்தாங்களா? அப்போ ஜெயலலிதாவுக்கு ஆறுதல் கொடுத்து பாதுகாப்பா இருந்த ஒரே ஆம்பள நடராஜன்தான்.அவர் இப்போது ஜெயலலிதாவுடன் இல்லை! மத்தபடி இன்று பதவி சுகம் அனுபவிக்கும் ஓ.பி. எஸ். முதற்கொண்டு எவரும் ஜெயலலிதாவின் கஷ்டத்தில் பங்கெடுக்கவில்லை. அவர்களுக்கு ஜெயலலிதா மீது பாசமும் இல்லை பதவிக்காக பிரச்சினை செய்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம் செய்யும் அதிமுகவினருக்கு காவல்துறை முழு பாதுகாப்பு கொடுக்கிறது என்ற..

(குறுக்கிட்டு) அதிமுககாரங்க செய்யறத ஆர்ப்பாட்டம்னு நாகரீகமா சொல்றீங்க… அந்த அராஜகங்களுக்கு காவல் துறைதான் பாதுகாப்பா இருக்கு. நவநீதகிருஸ்ணன் சத்யமூர்த்தி பவனுக்கு கும்பலாக வந்து கலவரம் செய்த போது, எடுக்கப்பட்ட ஒரு படம் நாளிதழில் வந்திருக்கிறது. நவநீத கிருஸ்ணன் அருகில் இருக்கும் ஒருவன், போலீஸ் லத்தியை கையில் வைத்திருக்கிறான். அந்த லத்தியை வைத்துத்தான் காங்கிரஸ் தொண்டர்களை அடித்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறான். அந்த லத்தி எந்த காவலருக்கு சொந்தமானது.. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. நவநீத கிருஸ்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. காங்கிரஸ் மீது ஏவிவிடப்பட்டுள்ள இந்த கலவரம் அரச பங்கரவாதம். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ரவுடிகளையும் போலீசையும் வைத்துக்கொண்டு செய்யப்படும் பயங்கரவாதம். ஆனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஜெயலலிதாவின் ஹிட்லர் தனத்தை எதிர்த்து போராடுவோம்

இவ்வளவு ஆவேசமாக பேசுகிறீர்கள்.. இனி வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வராது என்று உறுதி கூற முடியுமா?

(கோபத்துடன்) அரசியலை அரசியலா பாருங்க.. பிரச்சினையை பிரச்சினையா பாருங்க! தேர்தல் எப்பவோ வரப்போகுது.. இப்ப என்ன அது பத்தி பேச்சு? என்னைக்காவது ஒரு நாள் நீங்க செத்துப்போகத்தான் போறீங்க.. அதுக்குன்னு இப்பவே குழிவெட்டி வப்பீங்களா?

ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் அது சவக்குழிக்கு ஒப்பானது என்கிறீர்களா? 

இது குழந்தைத்தனமான கேள்வி.

velusamy-interview2

ஜெயலலிதாவுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

அதிமுகவினரின் அராஜகங்களுக்கு காங்கிரஸார் பயப்பட மாட்டார்கள். ஆகவே ஜெயலலிதா இன்னொன்றை செய்யலாம்.. இந்திய பிரதமர் நேரு , இலங்கை பிரதமர் ஸ்ரீமாவா பண்டார நாயகா சந்திப்பு நடந்தது. அதைப்பற்றி, “நேருவோ மனைவியை இழந்தவர், ஸ்ரீமாவோ கணவனை இழந்தவர்.. தனிமையில் இருவரும் பேசினால் என்ன பேசியிருப்பார்கள்..? பத்து வயது பாமா, மாமா படுக்க போகலாமா.. என்றால் அதற்கு என்ன பொருள்? பதினெட்டு வயது பருவமங்கை பாமா, படுக்கபோகலாமா என்றால் அதற்கு என்ன பொருள் என்று உனக்குத் தெரியாதா தம்பி” என்று எழுதியவரைத்தான் பேரறிஞர் என்று தனது கொடியில் வைத்திருக்கிறார் ஜெயலலிதா…! இனி இளங்கோவன் படத்தையும் அவரது கட்சிக் கொடியில் போட்டுக்கொள்ளட்டும்!

-டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu?fref=ufi