இளம்பெண் ஈவ்–டீசிங்: கட்டிட மேஸ்திரி கைது

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டபடிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செல்வதற்காக தினமும் அருகில் உள்ள செங்கல்மேட்டு பஸ் நிறுத்தத்திற்கு வருவார்.

Eve-Teasing-in-Udaipur

இதை கவனித்த கோணங்கிநாயக்கனஅள்ளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் சிவசங்கர் அந்த பெண்ணை தினசரி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்ட அந்த பெண்ணை சிவசங்கர் பின்தொடர்ந்து சென்று தொல்லை செய்துள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் சிவசங்கரை பிடித்து அடித்து உதைத்து கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிவசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிவசங்கர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.