இளையராஜாவுடன் ஒரு படம் செய்வேதே பெருமை : ஏ ஆர் ரகுமான்

சென்னை

ளையராஜாவுடன் ஒரு படத்தில் பணி புரிவதே மிகவும் பெருமை என ஏ அர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 என்னும் இசை நிகழ்ச்சி நேற்றும் இன்றும் ஆக இரு தினங்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சாபில் நடைபெறுகிறது. நேற்று முதல் நாள் நிகழ்வில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்துக்கொண்டார். விழாவின் தொகுப்பாளினிகளாக நடிகைகள் கஸ்தூரி மற்றும் சுகாசினி இருந்தனர்.

நடிகை கஸ்தூரி ஏ ஆர் ரகுமான் கீ போர்ட் வாசித்து இளையராஜா பாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க மணி ரத்னம் இயக்கிய மவுனராகம் படத்தில் இட்ம்பெற்ற மஞ்சம் வந்த தென்றலுக்கு பாடலை இளையராஜா பாடினார். அதற்கு ரகுமான் கீ போர்ட் வாசித்தார். இடையில் ரகுமான் ஒரு சிறு தவறு செய்தார்.

உடனே ராஜா, “என்ன வாசிக்கிறாய்? உனக்குத் தான் இந்த டியூன் நன்கு தெரியுமே?” என செல்லமாக கடிந்துக் கொண்டார்.

ரசிகர்களை பார்த்து, “ரகுமான் என்னிடம் மூன்றாம் பிறை படத்தில் இருந்து பனி புரிந்தார். சுமார் 500 படம் வரை என்னுடன் அவர் பணி புரிந்திருப்பார்” என தெரிவித்தார்.

ரகுமான் உடனடியாக, “உங்களிடம் ஒரு படத்தில் வேலை பார்ப்பதே மிகவும் பெருமை தரும் விஷயம் சார்” என கூறினார்.