இஸ்ரேலிய பிரதமருக்கு கைது உத்தரவு! மூடி மறைத்த மேற்கத்திய ஊடகங்கள்!

பெஞ்சமின் நெத்தன்யாகு
பெஞ்சமின் நெத்தன்யாகு

மட்ரிட்:

ஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டப்படி குற்றமாகும். ஆகவே இந்த சம்பவம் குறித்து ஸ்பானிஷ் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்பட்டது.

இதற்கான வழக்கு விசாரணை சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி, ஜோஸ் டி லா மாட்டா, “இஸ்ரேலிய பிரதமர் , பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் ஸ்பெயின் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று ஸ்பேனிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published.