இஸ்லாமிய இளைஞர்களை கேலி செய்யாதீர்!

aaaaa

 த்திரபிரதேசத்தில் கிணற்றில் இருந்து பசுங்கன்றை காப்பாற்றிய முஸ்லிம்.மத நல்லிணக்க சம்பவம் என பாராட்டு.-பத்திரிக்கை முதல் பக்க செய்தி.

ஐயா, ,ஊடகவியலாளர்களே, இந்திய மக்களே..

ஒரு கிணற்றில் விழுந்த ஒரு கோழி, ஆடு, பூனை, நாய், காகம் என்று மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்காத உயிரினங்களை காப்பாற் றுவது அனைவரின் கடமை. இதையேத்தான் அந்த முஸ்லிம் இளைஞரும் செய்திருக்கிறார்.  மாட்டுக்கறி சாப்பிடுகிறார் என்பதற்காக ஆபத்தில் உள்ள எந்த உயிரினத்தையும் காப்பாற்ற மாட்டார், அப்படி காப்பாற்றுவது மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டு என்று செய்தி போடுகிறீர்களே..

நீங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர்களை என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இப்படி எல்லா மனிதர்களுக்கும்,உயிரினங்களுக்கும் உதவக்கூடிய ஒரு எளிய மனித உணர்வை மத நல்லிணக்கம் என்றுகூறி கொச்சைப்படுத்தாதீர்கள்.இந்த நிகழ்வில் கூட உங்கள் அரசியலை கலக்காதீர்கள்.இப்படி செய்திபோடுவது முஸ்லிம் இளைஞர்களை கேலி செய்வதாகவே அர்த்தம். இதை உணர்வீர்களா?

  காதர் அலி https://www.facebook.com/kadhar.ali.5?fref=photo

Leave a Reply

Your email address will not be published.