“உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்!: : டி.டி.வி. தினகரன்

டப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதில் முதலமைச்சர் பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

வாக்கெடுப்பு நடைபெற்ற காலத்தில் ஓபிஎஸ் அணி, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக இருந்தது. ஆகவே, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 12 பேர் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றதையடுத்து, டஇந்த வாக்கெடுப்பு செல்லாது.    ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரி, ஓபிஎஸ் அணியில் இருந்த எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆனால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர்  தகுதி நீக்கம் செய்தது  செல்லும் என உயர்நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது. இது  இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.