உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : குரூப் பி விவரங்கள்

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டி 2018ல் விளையாடம் போகும் குரூப் பி பிரிவில் உள்ள நாடுகள் குறித்த விவரங்கள் இதோ

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 கள் தொடங்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.    இந்தப் போட்டிகளில் மொத்தம் எட்டு பிரிவுகளில் 32 நாட்டு அணிகள் விளையாட உள்ளன.     ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி எச் என பிரிக்கப்பட்ட இந்த பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 4 நாட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன.    நாம் இந்த செய்தியில் பி பிரிவில் உள்ள நாடுகளைப் பற்றி பார்ப்போம்.

குரூப் பி : 

போர்ச்சுகல்

கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகல் நாடு தற்போதைய உலகக் கோப்பையை வெல்வதில் முழு முனைப்புடன் உள்ளது.   கடந்த 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை போட்டிகளில் இருந்தே  ரசிகர்களின் ஆதரவு இந்த அணிக்கு பெருமளவில் உண்டு.  இந்த அணியில் பீப், ஜுவோ மௌண்டினோ மற்றும் ஆண்டர் சில்வா ஆகியோர் வெற்றியை ஈட்டித் தரும் வீரர்கள் என நம்பப்படுகிறது.

போர்ச்சுகல் அணியின் முக்கிய வீரர் இந்த அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த அணியில் உள்ள பல முக்கிய வீரர்களின் நடுவே இவர் ஒரு ஸ்டார் விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார்.

இந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சாண்டாஸ் ஆவார்.    கடந்த 2014 ஆம் ஆண்டில் இவர் பயிற்சியாளர் ஆனதில் இருந்தே போர்ச்சுகல் அணியின் தலைவர் ரொனால்டோவுக்கு வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார்.

ஸ்பெயின்

ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா

இந்த அணி தனது உலக சாம்பியன் பட்டத்தை 2014 போட்டியில் இழந்தது.   அத்துடன் 2016ல்  ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் இழந்தது.   அதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக உள்ளது.    இந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமை உள்ளவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்     அனைவரும் இணைந்து வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த அணியின் நட்சத்திர வீரராக ஆண்ட்ரஸ் இனியெஸ்டா உள்ளார்.    கடந்த 2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு வெற்றி பெற்று தந்த கடைசி கோலை அடித்தவர் என்னும் பெருமை உள்ளவர்.

இந்த அணியின் பயிற்சியாளர் 51 வயதான ஜுவான் ஜுலன் லாபெடகி தகுதிச் சுற்றின் போது ஸ்பெயின் அணிக்கு மிகவும் அருமையாக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

மொரோகோ

நபில்

மொரோகோ 20 வருடங்கள் கழித்து மீண்டும் உலகக் கோப்பை போட்டியினுள் நுழைந்துள்ளது.   இந்த அணியில் அஜாக்ஸ், ஹகீம் ஜியெச் மற்றும் யூனுஸ் பெல்ஹண்டா ஆகிய இளைஞர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக உள்ளனர்.   இந்த அணியில் இவ்வீரர்கள் பல நவீன நுட்பங்களுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியின் முக்கிய வீரரான நபில் திரார் தனது பன்முகத் திறமையால் இந்த அணிக்கு வெற்றி தேடி தருவார் என நம்பப் படுகிறது.

இந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் என்னும் பிரஞ்சுக்காரர்.  இவர் இந்த அணிக்கு பல நவீன நுட்பங்களை கற்றுத் தந்து இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து கடந்த 2012 ம் வருடம் ஆப்ரிகன் கோப்பை போட்டியில் இந்த அணியை வெற்றி பெறச் செய்தவர் ஆவார்.

ஈரான்

சர்தார்

இந்தப் போட்டியில் ஆசியாவில் இருந்து தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற முதல் அணி என்னும் பெருமை ஈரானுக்கு உண்டு.   தகுதிச் சுற்றில் இந்த அணியின் இரு சுற்று ஆட்டங்களில் இந்த அணி நன்கு விளையாடியது.    இந்த அணிக்கு இது ஐந்தாவது உலகக் கோப்பை பந்தயமாகும்.

இந்த அணியின் முக்கிய வீரரான சர்தார் அசமௌன் ஆவார்.   இந்த 22 வயதுஇளைஞர் இதுவரை சர்வதேச போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த அணியின் பயிற்சியாளர் கார்லோஸ் குயிரோஸ்.   இவர், “நாங்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லவில்லை.   உலகக் கோப்பையை வெற்றி பெற செல்கிறோம்”  என தனது பயண ஆரம்பத்தில் கூறி உள்ளார்.

குரூப் சி குறித்த விவரங்களை அடுத்த செய்தியில் காண்போம்