உலகளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து 2.0 சாதனை!!

2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா உலக அளவில் ட்ரெண்டு ஆகி சாதனை புதிய சாதனை படைத்து உள்ளது. 2Point0TrailerLaunch என்ற ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்டு ஆகி வருகிறது

2.0

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு படமோ, அல்லது நிகழ்வோ நடக்கும் போது அது உலகளவில் ட்ரெண்ட் ஆவது சிரமம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் படம் உலகளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. அந்த வகையில் படம் வெளியீடு கூட இல்லை, படத்தின் டிரைலர் வெளியீடு விழாவே உலகளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனைப் படைத்துள்ளது. 2.0 டிரைலர் வெளியீடு நிகழ்ச்சியின் 2Point0TrailerLaunch என்ற ஹேஸ்டேக் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.