உலகிலேயே நீண்ட தூரம் பயணிக்கும் ‘நான் ஸ்டாப்’ கத்தார் விமானம்

13764690

டோகா:
உலகிலேயே இடைநில்லா நீண்ட தூரம் பயணம் செய்யும்  பயணிகள் விமானத்தை கத்தார் விமான நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
டோஹா & அக்லாந்து இடையிலான இந்த வழித்தடம் 9 ஆயிரத்து 34 மைல் தூரம் கொண்டதாகும். இதன் பயண நேரம் 18 மணி நேரம் 34 நிமிடங்கள் ஆகும். இடைநில்லா விமானம் இது. இது உலகின் முதல் நீண்ட தூர பயணம் கொண்ட விமானமாகும்.
இதற்கு முன் இந்த நிறுவனத்தில் கந்தாஸ் டல்லாஸ்& சிட்னி இடையிலான 8 ஆயிரத்து 578 மைல் தூரத்தை 16 மணி  நேரம் 55 நிமிட பயணமே அதிக தூரம் கொண்டதாக இருந்தது. தற்போது கூடுதலாக இரண்டு மணி நேரம் பயணம் கொண்ட போயிங் 777&200 எல்ஆர் ரக விமானத்தை கத்தார் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
முன்னதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாய்& பனாமா நகரம் இடையிலான 17 மணி 41  நிமிட பயண நேரம் கொண்ட விமானத்தை இயக்கி வருகிறது. தற்போது கத்தார் நிறுவனம் இந்த இலக்கை முந்துகிறது.
இதேபோல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமம் நியூயார்க்&சிங்கப்பூர் இடையிலான 9 ஆயிரத்து 535 மைல் தூரம் கொண்ட பயணத்தை 18 மணி நேரம் 50 நிமிடங்களில் செல்லும் விமான வழித்தடத்தை வரும் 2018ம் ஆண்டு அறிமுகம் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.