உலக தமிழ் சினிமாவில் முதல் முதலாக…

vedhalam

 

ஜீத்தின் வேதாளம் எப்போது வெளியாகும் என்கிற பிரச்சினை தீர்ந்து வரும் பத்தாம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் என உறுதி ஆகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

லட்சுமி மேனன், அஸ்வின், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

சமீபகாலமாக இந்தியாவில் ரிலீஸ் ஆகும் அன்றே உலகம் முழுதும் வெளியிடப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. வேதாளமும் வரும் பத்தாம் தேதி ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், யு.எஸ்.ஏ., இலங்கை உட்பட பல நாடுகளில் ரிலீஸ் ஆகிறது. அதோடு போலந்திலும் வெளியாகிறது.

இதுவரை வேறு எந்த தமிழ்த் திரைப்படமும் போலந்தில் ரிலீஸ் ஆகிறது. ஆக, போலந்திலும் கால் பதிக்கிறார் தல!

Leave a Reply

Your email address will not be published.