உஷ்…: அப்பா வழியில் தப்பாக போகும் பிள்ளை

images-71

“நட்சத்திர” நடிகரின் லீலைகள் ரொம்பவே பிரபலம். வாயில் பபிள்கம் வைத்து பேசுவது போல இருந்தாலும், அந்தக்கால கன்னியரின் கனவு நாயகன் அவர். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்.

ஆனால் நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரமாடடார். வந்தாலும் நாயகிகளிடம் வழிவதிலேயே நேரத்தை கடத்துவார். தவிர “மயக்க” விரும்பி. பகல் இரவு தெரியாமல் தன்னை மறந்து கிடப்பார்.

இதனால் வாய்ப்புகள் பறிபோக, அரசியலுக்கு வந்தார். ஆனாலும் குணம் மாறவில்லை. மீட்டிங்கில் பேச டேட் கொடுத்துவிட்டு, எங்காவது ஹோட்டல் ரூமில் மயக்கத்தில் கிடப்பார்.

இப்போது அவரது மகன் நடிக்க வந்திருக்கிறார். இப்போதே இவர் அப்பாவின் வழியை தப்பாமல் கடைபிடிக்கிறார். சமீபத்தில் பூஜை போடப்பட்ட படத்தில் இவரை ஒப்பந்தம் செய்தார்கள்.  அதற்கு முன்பே நாயகியை தீர்மானித்து அவருக்கு அட்வான்ஸூம் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால் இந்த  மகன் நடிகர், தனது காதலி நடிகையைதாதந் ஹீரோயினாக்க வேண்டும் என்று அடம்பிடித்து சாதித்துவிட்டார்.

அது மட்டுமல்ல… படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல், நாயகியுடன் டிஸ்கஸ் செய்வதிலேயே நேரத்தை கழிக்கிறாராம்.

“அப்பாவுக்கு தப்பாத பிள்ளை.. தேறின மாதிரித்தான்” என்று முணுமுணுக்கிறார்கள் கோலிவுட்டில்.