உ பி : ரெயில் தடம் புரண்டு இருவர் மரணம்

க்னோ

வாஸ்கோடகாமா – பாட்னா விரைவு ரெயில் உ. பி. யில் தடம் புரண்டு இருவர் மரணம் அடைந்துள்ளனர்.

கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் விரைவு ரெயில் இன்று அதிகாலை உ பி மாநிலம் பண்டா என்னும் இடத்தில் விபத்துக்குள்ளாகியது.   ரெயில் தடம் புரண்டதில் 13 பெட்டிகள் கீழே இரங்கி உள்ளது.  அதிகாலை 4..18 மணிக்கு நடந்த இந்த விபத்தில் இரண்டு பயணிகள் மரணம் அடைந்துள்ளனர்.

8 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  காயம் அடைந்தவர்கள் மருத்துவம்னையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.  மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.  தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது  தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மரணம் அடைந்தவரகள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.