எங்களுக்கு கொள்கை  கிடையாது: விஜயகாந்த்  பேச்சு

 

 

download (1)

கும்மிடிப்பூண்டி: : ”எங்களுக்கு கொள்கை கிடையாது.  அ.தி.மு.க., – தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அப்போது அவர், “இன்று, ஆறு கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறோம். எங்களுக்கு கொள்கை கிடையாது; அ.தி.மு.க., – தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை. பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வருவதாக, ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கொள்ளையடிப்பதை படிப்படியாக குறைக்க முன்வரவில்லை.
குறிப்பாக, தமிழகத்திலேயே, திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மணல் கொள்ளை அதிகமாக இருக்கிறது. .
இதுவரை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்தன. இன்று, மாற்று சக்தியாக எங்கள் கூட்டணி  உருவாகியிருக்கிறது. . மாற்று சக்திக்கான உண்மையான யுத்தம் துவங்கி விட்டது” என்று விஜயகாந்த் பேசினார்.

 

 

You may have missed