எட்டு வழிச் சாலையால் நிலச் சொந்தக்காரர்களுக்கு என்ன பிரச்சனை?!

நெட்டிசன்:

சிவசு அவர்களின் பதிவு:

1. பாட்டன், தாத்தா காலத்தில் இருந்து வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடம் பெயர வேண்டும்.

2. இந்தியா என்ற ஊழல் எரிபொருளில் சுழலும் நாட்டில் நிலத்திற்கு அரசு விலை என்பது எடுத்துக்காட்டாக ஒரு ஏக்கர் பத்து லட்சம் என்றால் அதன் மார்க்கெட் மதிப்பு ஒரு கோடி ரூபாய். இதன் அடிப்படையில் ஐந்து ஏக்கர் நிலம் கொண்டவர் ஐந்து கோடிகளுக்கு அதிபதியாக இருந்த நிலையில் இப்போது ஐம்பது லட்சத்திற்கு மட்டுமே அதிபதி. தன் பணம் நான்கரைக்கோடி பறிபோகிறது.

 

3. ஐம்பது வயதைக் கடந்து விட்ட விவசாயம் தவிர வேறு தொழில் தெரிந்திராதவர்கள் நிலத்தையும் குறைந்த விலைக்கு இழந்துவிட்டு மகன், மகள் திருமணத்தை நடத்த இயலாமல், தங்கள் வாழ்க்கையின் இறுதிக்காலத்திற்கான உத்தரவாதம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளுனர்.

4. இப்பகுதியில் வாழும் பெரும்பாலானோர் குறிப்பாக முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், வெளியுலக தகவலற்றவர்கள். இவர்களுக்கு பிரதமர் என்றால் என்ன, முதல்வர் என்றால் என்ன..பசுமைத் திட்டம் என்றால் என்ன, டிபென்ஸ் காரிடார் என்றால் என்ன…வேதாந்தா குழுமத்தார் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் எதுவுமே தெரிந் திராதவர்கள். ஆனால், இவர்கள் தங்களுக்கென இருந்த சொத்துக்களை இழக்கிறார்கள்.

5. அரசு மதிப்பிலான நிலத்தின் விலைக்கு கிடைக்கும் பணத்தை வைத்து இதே அளவிலான இடத்தை வாங்க முடியாது, அதாவது ஒரு ஏக்கர் வைத்திருந்தவரால் கால் கிரவுண்டுகூட வாங்க முடியாது. எனவே அவர்கள் கூலித்தொழிலாளியாக அல்லது அந்தப் பணத்திற்கு கிடைக்கும் புதிய நிலத்தில் எல்லாமே முதலில் இருந்து தொடங்கவேண்டும்.

வாழ்விடம், தொழில், சமூகக் கட்டமைப்பு, குடும்ப உறவுகள், எதிர்காலத் திட்டங்கள், பணம், சொத்து என எல்லாமே தலைகீழாக மாறிப்போகின்றன இவர்களுக்கு….