என்ன நடக்கிறது கரூரில்? வைரலாகும் வேட்பாளர் ஜோதிமணியுடன் மாவட்ட கலெக்டர் பேசும் ஆடியோ

கரூர்:

டந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும்  கரூரில்,  பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்து விடுவேன் என்று மாவட்ட கரூர் கலெக்டர் பேசிய ஆடியோவை  கருர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஜோதிமணி வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

இரவில் கலெக்டர் குடித்துவிட்டு  வேட்பாளர் ஜோதிமணியிடம் பேசினாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

பணப்பட்டுவாடா சம்பந்தமாக வேலூர் லோக்சபா தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கரூரிலும் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. நேற்று இரவு கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதி, டிடிவி தரப்பு தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடும் தேனி தொகுதிகளிலும் வருமான வரித்துறையினரின் ரெய்டு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

கரூத் தொகுதியில், தேர்தல் அதிகாரியும் அம்மாவட்ட கலெக்டருமான அன்பழகன், தனது வீட்டிற்கு வந்து காங்கிரஸ் திமுகவை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து  மிரட்டி சென்றதாகவும், காவல்துறையினர் வந்து தன்னை மீட்டதாகவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் கூறினார். ஐஏஎஸ் ஆபீசரான எனக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு என கேள்வி எழுப்பியிருந்தார்.

கரூர் கலெக்டரை திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியும், வேட்பாளர் ஜோதிமணியும் மிரட்டியதாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை நேரில் மிரட்டியதாக மாவட்ட கலெக்டரும் புகார் அளித்துள்ளதால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன்

இந்த நிலையில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் கலெக்டர் அன்பழகன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என கலெக்டர் கூறுவதும், அதற்கு ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.  இந்த ஆடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோதிமணி – கரூர் கலெக்டர் பேசும் ஆடியோ…