என் பெயரைக் கெடுத்துட்டாங்க!:  புலம்பும்  ஆனந்தி!

anandhi 1

ஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ்  ஆகியோர் நடித்து சமீபத்தில்  வெளி வந்திருக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஆளாளுக்கு திட்டித்தீர்க்கிறார்கள்.

“பச்சை டயலாக், சிகப்பு காட்சிகள் என்று நீலப்படமாகவே எடுத்துவிட்டார் இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன்” என்று வசைபாடாதவர்களே இல்லை.

சரி.. இதெல்லாம் வெளியிலிருந்து வரும் வசை என்றால், நாயகி ஆனந்தியும் படத்தையும், இயக்குநரையும் அர்ச்சிக்கிறார்.

“டைரக்டர்  ஆதிக் என்னிடம் சொன்ன கதை வேறு. படமாக்கிய கதை வேறு.  எனக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும், படமாக்கப்பட்ட காட்சிகளும் வித்தியாசமாக இருந்தன.  அதுமட்டுமல்ல… முதலில் நான்தான் மெயின் ஹீரோயின் என்றார். ஆனால் ,. டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் போல போஸ்டர் போட்டிருக்கிறார்.

படத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், கிளைமாக்ஸ்.. எதிலும் எனக்கு உடன்பாடில்லை.

‘கயல்’, ‘சண்டி வீரன்’ படங்களில்  நாகரீகமாக நடித்து நல்ல பெயர் வாங்கினேன். அதை கெடுத்துவிட்டார் இந்த படத்தின் டைரக்டர். இதுபற்றி அது பற்றி டைரக்டர் ஆதிக்கிடம்ம் கேட்டபோது சரியான பதில் இல்லை. நான் தொடர்ந்து கேட்கவும், தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார்” என்று புலம்புகிறார் ஆனந்தி.

ஆதிக் சார்..      படத்திலதான் பெண்களை கேவலப்படுத்தியிருக்கீங்கன்னா.. நிஜத்திலும் அப்படித்தானா?

 

Leave a Reply

Your email address will not be published.