எம்.பி., எம்.எல்.ஏக்களே குரல் கொடுங்கள் : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

 

அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இங்கு போராடும் இளைஞர்கள் சார்பாக, பேசிய வினோத் என்ற இளைஞர் பேசியதாவது:

“எங்களது கோரிக்கை மூன்றுதான்.

மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்.

நாங்கள் அறவழி போராட்டம் நடத்துகிறோம். ஆனால் மாநில அரசு வன்முறையை ஏவுகிறது. மாநில அரசின் காவல்துறை எங்களை அடித்து நொறுக்குகிறது. இதை மாநில அரசு நிறுத்த வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் இனியாவது நியாயத்தை உணர்ந்து எங்கள் சார்பாக குரல் எழுப்ப வேண்டும். இங்கே போராட வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “போராட்டத்தை நடத்தும் நாங்கள் எந்த கட்சி, அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. எங்களை நக்சல்கள், மாவோயிஸ்ட் என்று பீதியை உருவாக்குகிறது போலீஸ். இதை நிறுத்த வேண்டும்.” என்றும் கோரினார்.