எல்.ஐ.சி மூலம் மூத்த குடிமக்களுக்கு 8% பென்சன்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி:

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு 8 சதவீத ஆண்டு பென்சன் திரும்ப கிடைக்கும் வகையில் உறுதியளிப்பை வழங்கும் வகையிலான இந்த ‘‘வரிஷ்தா பென்சன் பீமா யோஜனா 2107’’ என்ற இந்த திட்டம் வரும் நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

இந்த பென்சன் மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என 4 தவனைகளில் எது விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இது செயல்படுத்துகிறது. டெபாசிட் மீதான வட்டி வருவாயை நம்பி வாழும் இவர்கள், சந்தை மாற்றத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த 8 சதவீத உறுதியளிப்பு தொகையை மத்திய அரசு ஆண்டு மானியமாக எல்.ஐ.சி.க்கு மத்திய அரசு வழங்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.