ஏப்ரல் இறுதியில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி

teacher

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இம்மாத கடைசி வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் என்று தெரிகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 4ல் முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ல் 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், மே 12ல் 3ம் கட்ட பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது. மே 15ல் நடைபெற உள்ள இறுதிக்கட்ட பயிற்சியில், ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன.