ஏ.என்.ஜா புதிய நிதித்துறை செயலாளராக நியமனம்: மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி:

த்திய நிதித்துறை செயலளராக ஏ.என்.ஜா-வை மத்திய அரசு நியமித்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில்  நியமனங்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் ஏஎன்.ஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே நிதித்துறை செயலாளராக இருந்து வந்த  1981-ன் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி யான ஹஸ்முக் ஆத்யா கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நிதித்துறை செயலாளராக ஏ.என்.ஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது 59 வயதாகும் அஜய் நாராயண ஜா (ஏ என் ஜா) 1982ம் ஆண்டை மணிப்பூர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் தனது கல்லூரி படிப்பை ஸடீபன்ஸ் கல்லூரியில் படித்து முதல்நிலையில் தேர்வான நிலையில், கனடாவிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து பொருளாதார கொள்கை முகாமைத்துவத்தில் முதுநிலை படிப்பு படித்தார். இதற்காக அவர் உலக வங்கி உதவித்தொகை பெற்றது குறிப்பிடத்தக்கது.