isis-flag
ஜெருசலேம்:
ஐஎஸ்ஐஸ் அமைப்பு தனது வீரர்களுக்கு வழங்கும் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையால், அந்த அமைப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகவலை ஜெருசலேத்தில் வெளியாகும் ஒரு இதழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு அப்படி என்ன தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.
ஆனால் இந்த மாதம் அமெரிக்காவின் கூட்டுப்படையினர் ஈராக் மசூல் நகரத்தில் நடத்திய வான் வழி தாக்குதலில் பணம் இருந்த பெட்டகம் அழிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் இந்த அமைப்பின் செயல்பாட்டுக்காக மில்லியன் கணக்கில் சேர்த்து வைத்திருந்ததாக தெரிகிறது.
அனைத்து எரிந்துவிட்டதால் அந்த அமைப்பின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. உள்ளூர் மக்களிடம் வரி விதித்து நிதி திரட்டுவதற்காக மசூல் நகரத்தில் புதிதாக கவர்னரை ஐஎஸ்ஐஎஸ் நியமித்துள்ளது. இதன் மூலம் மக்களிடம் அடாவடி வசூல் நடக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ‘ஜிகாத் வளர்ச்சிக்காக’ நிதி திரட்டுவதில் தவறில்லை என்று குரானில் குறிப்பிட்டிருப்பதாக அந்த அமைப்பு இந்த வசூலை நியாயப்படுத்தியுள்ளது.