ஐசிசி சாம்பியன் டிராபி 2017: ரோகித்சர்மாவின் சிறப்பான தொடக்கத்தால் பாகிஸ்தானுக்கு 320 ரன் இலக்கு!

பர்மிங்காம்:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான்  இடையேயான  ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 319 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு சவால் விடுத்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 320 ரன்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. இந்நிலையில் 3வது முறையாக மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லுாயிஸ் விதிப்படி 324 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இரண்டு தடவை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 ஓவர் குறைக்கப்பட்டு 48 ஓவராக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்ததை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

பாகிஸ்தானின் பந்து வீச்சை மிகவும் கவனமாக கையாண்ட இருவரும் நிதானமாகவே ஆடினர்.

ஒன்பதாவது ஓவரின் 5-வது பந்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடன் ரோகித் சர்மா, தவான் ஜோடி அதிரடி காட்ட தொடங்கியது.

ரோகித் சர்மா 71 பந்துகளிலும், தவான் 48 பந்துகளிலும் அரை சதம் அடித்ததால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களிடம் உற்சாகம் கரை புரண்டோடியது.

அதிரடியாக விளையாடி வந்த தவான், 65 பந்துகளில் 68 ரன் அடித்த நிலையில், சதாப் கான் பந்துவீச்சில் அசார் அலியிடம் சிக்கி ஆட்டமிழந்தார்.

33.1 ஓவரில் இந்தியா 173 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார்.

59 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் விராட் கோலி 52 ரன்களைக் கடந்தார் .

29 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் இந்திய வீரர் யுவராஜ் சிங் அரைசதம் அடித்தார்.

ரோஹித் சர்மா 91 ரன்களுடனும், தவான் 68 ரன்களுடனும், யுவராஜ் சிங் 53 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

விராட் கோஹ்லி 81 ரன்களுடனும், பண்ட்யா 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில்  48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா  319 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மாவின் சிறப்பான தொடக்க ஆட்டத்தின் காரணமாகவே  இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அதிக ரன்களை எடுக்க காரணமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து 320 ரன்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால்,  3வது முறையாக மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லுாயிஸ் விதிப்படி பாகிஸ்தான்கு  324 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில்மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் 4 வது முறையாக ஆட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாட்டு ரசிகர்களிடையே  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய போட்டியை கான பார்வை யாளர்கள் குறைவாகவே காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.