ஐபிஎல் 2020 பிளே-ஆஃப் போட்டிகளின் விபரங்கள்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே-ஆஃப் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பையும், இரண்டாமிடம் பிடித்த டெல்லியும் மோதுகின்றன.

இப்போட்டி, நவம்பர் 5ம் தேதி இரவு 7.30 மணியளவில், துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரண்டாவது பிளே-ஆஃப் போட்டி, நவம்பர் 6ம் தேதியான வெள்ளிக்கிழமை அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், மூன்றாமிடம் பெற்ற ஐதராபாத் அணியும், நான்காமிடம் பெற்ற பெங்களூரு அணியும் மோதுகின்றன.

முதல் பிளே-ஆப் போட்டியில் தோற்கும் அணி, இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் வெல்லும் அணியுடன், நவம்பர் 8ம் தேதி(ஞாயிறு) நடக்கும் இறுதி பிளே-ஆஃப் போட்டியில் மோதும்.

அதில் வெல்லும் அணி, முதல் பிளே-ஆஃப் போட்டியில் வென்ற அணியுடன், நவம்பர் 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.