ஐ.நா. இடம்பெயர்வு ஒப்பந்ததிலிருந்து பிரேசில் விலகல் – எர்னஸ்டோ அரூஜோ

ரியோ தே ஜனிரோ:

பிரேசிலின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ள வலதுசாரி கட்சியின் ஜெய்ர் போல்சோனாரோவின் கீழ் வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள எர்னஸ்டோ அரூஜோ, ஐ.நா.வின் இடம்பெயர்வு ஒப்பந்தம் குறித்து கூறுகையில், இந்த பிரச்சனையை சமாளிக்க சர்வதேச உடன்படிக்கை ஒரு “பொருத்தமற்ற கருவி” என்றும், ஒவ்வொரு நாடுகளும் தமது சொந்த கொள்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சிரியாவின் உள்நாட்டுப் போர் மற்றும் ஆபிரிக்காவின் வறுமை காரணமாக கடந்த 2015ம் ஆண்டு 1 மில்லியன் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவில் நுழைந்தனர்.

இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை சார்பற்ற ஒப்பந்தம் குறித்த முயற்சியில் இறங்கியது. சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை தற்போது 21.3 மில்லியன் ஆக உள்ளது.

புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பது, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது போன்ற பிரச்சினைகள் பற்றி பேசும் இந்த ஒப்பந்தம், பெரும்பாலும் குடியேற்றத்தை அதிகரிக்கும் என்று வலதுசாரி ஐரோப்பிய அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், அமெரிக்கா தவிர 193 ஐ.நா. சபை உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால், பிரேசிலின் தற்போதைய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் உட்பட, 164 உறுப்பினர்கள் மட்டுமே, திங்களன்று மராகேஷில் நடைபெற்ற ஒரு விழாவில் அதிகாரபூர்வமாக அதை உறுதிப்படுத்தினர்.

அரூஜோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போல்சோனரோ அரசு இந்த இடப்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கையில் இருந்து விளகிக்கொள்ளும்… பிரச்சனையை சமாளிக்க இது ஒரு பொருத்தமற்ற கருவி,’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இடம்பெயர்தலை உலகளாவிய பிரச்சனையாக கருதக்கூடாது. மாறாக, ஒவ்வொரு நாடுகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டும், என்றும் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் இருந்து பிரேசில் அகதிகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும், ஆனால், அந்த நாட்டில் “அடிப்படை புள்ளி ஜனநாயகத்தை மீட்டெடுப்பதாக” இருக்க வேண்டும், என்றார் அரூஜோ.

கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் நாடுகள் உட்பட பத்து நாடுகள், அவர்கள் ஐ.நா. குடியேற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், சில்லி நாட்டு அதிகாரி ஒருவர் வார இறுதியில் சாண்டியகோவும் விலகிக்கொள்ளும் என்று கூறினார்.