ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் – நடிகர் கமல் சந்திப்பு

சென்னை வந்துள்ள ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்தார்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல், “ஒடிசாவில் இயற்கை பேரழிவு தடுக்க  சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கமல் வலியுறுத்தினார்.