ஒட்டகங்கள், ஆடுகள் கத்தாருக்கு திருப்பி அனுப்பபட்டன : சவூதி அரேபியா

ரியாத்

த்தாரை சேர்ந்த 12000க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள், மற்றும் ஆடுகள் அவைகளின் உரிமையாளருடன் சவுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டன

கடந்த மாதம் 5ஆம் தேதி கத்தார் நாட்டுடன் ஏனைய வளைகுடா நாடுகள் அனைத்து தொடர்பையும் துண்டித்துக் கொண்டது தெரிந்ததே.

கத்தார் நாட்டை சேர்ந்த சில விவசாயிகள் தங்களின் ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பண்ணைகளை சவுதி அரேபியாவில் வைத்திருந்தனர்.  அவைகளை சவுதி அரசாங்கம் கத்தாருக்கு அனுப்பி வைத்து விட்டது.  உரிமையாளர்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

 

கத்தார் தற்போது சவுதியில் இருந்து வந்த சுமார் 7000 ஒட்டகங்களையும் சுமார் 5000 ஆடுகளையும் பெற்றுக் கொண்டு, அவைகளுக்கு உணவு, நீர், மற்றும் தங்குமிடங்களை அளித்துள்ளது.   ஏற்கனவே ஒட்டகங்களும், ஆடுகளும் சுமார் 22000 கத்தார் நாட்டில் உள்ளது.  பால், இறைச்சி போன்றவைகளுக்காக இவை வளர்க்கப்படுகின்றன

இந்தத் தகவலை தி பெனின்சுலா என்னும் கத்தார் நாட்டு செய்தித்தாள் வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.