download (1)
லங்கையில் ஒன்றாம் வகுப்பு முதல்  பாலியல் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று இலங்கை  சிறுவர் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது.
சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.
இதை அந்த அமைப்பின் தலைவி நடாஷா பாலேந்திரா இது பற்றி கூறியதாவது:

நடாஷா பாலேந்திரா
நடாஷா பாலேந்திரா

“பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்க இலங்கை கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இலங்கையில் சிறுவர்கள்  மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த பாலியல் பாடத்தில் உடற்கூறு மற்றும் வாழ்க்கை குறித்த அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ளும்  பாடங்கள் இருக்கும்.
சிறுவர்களுக்கு தமது உடல் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம்.பான விழிப்புணர்வு அவசியம் என்கிறது இலங்கை சிறார் பாதுகாப்பு அதிகார சபை
அப்படியான கல்வியறிவை போதிக்கும்போது, பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதை சிறார்கள் அறிந்துகொள்ள முடியும் .அதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
குற்றவியல் சட்டங்ககளால் மட்டும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று  டாக்டர் நடாஷா பாலேந்திரா தெரிவித்தார்.  இதையடுத்து வரும் கல்வி ஆண்டு முதலே இலங்கையில் பாலியல் கல்வி துவக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில், பள்ளிகளில் பாலியல் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் சொல்ல… அது கூடாது என்று மதவாத அமைப்பினர் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இலங்கையில் ஒன்றாம் வகுப்பு முதல் பாலியல் கல்வி நடத்தப்பட வேண்டும் என்று அங்குள்ள சிறுவர் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.