ஒப்பனையாளர் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னைக்

பிரபல நடிகர்களின் ஒப்பனையாளர் முத்தப்பா உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

தென்னக திரை உலகில் மிகவும்  பிரபலமான ஒப்பனையாளர் முத்தப்பா.  இவர் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.  அதற்கான ஓய்வூதியமும் முத்தப்பா பெற்று வந்துள்ளார்.   இவர் திரை உலகில் பல கதாநாயகர்களுக்கு ஒப்பனையாளராக பணி புரிந்தவர் ஆவார்.

பிரபல நட்சத்திரங்களான எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கன்னட ராஜ்குமாருக்கு ஒப்பனையாளராக பணி புரிந்துள்ளார்.     ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தனக்கு  பிரத்தியேக ஒப்பனையாளராக முத்தப்பாவை நியமித்தார்.   அதன் பிறகு அவர் ரஜினிகாந்திடம் மட்டும் பணி புரிந்து வந்தார்.

ரஜினிகாந்த் சிபாரிசு செய்ததல் ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் முத்தப்பா நடித்துள்ளார்.   அவர், “என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் கிடையாது.   எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் மற்றும், நான் பெறாத எனது பிள்ளை’ என அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்வார்.

இன்று காலை சுமார் 7.15 மணிக்கு முத்தப்ப்பா மரணம் அடைந்தார்.    கடும் சோகத்தில் ஆழ்ந்த ரஜினிகாந்த் வடபழனியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.