ஒரு கிலோ தங்கத்தில் மின்னும் விநாயகர்!

12027512_767089983435214_7464185061428011493_n

சென்னை:

பிரபல நகைக்கடையில் ஒரு கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு விநாயகர் உருவம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருறது. நடனமாடும் விநாயகர், தவில் வாசிக்கும் விநாயகர் என்று பாரம்பரிய வடிவங்களில் மட்டுமின்றி கிரிக்கெட் ஆடும் விநாயகர், ஏவுகணை செலுத்தும் விநாயகர் என நவீன வடிவங்களிலும் விநாயகர் உருவங்கள் செய்யப்படுகின்றன.

களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், ஆகியவை மூலம் விநாயர் சிலைகள் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பிரபல நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களால் விநாயகர் உருவம் செய்து வைக்கப்பட்டுள்ளது, விநாயகரின் வாகனமான எலியும் (மூஞ்சூறு) மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“மொத்தம் ஒரு கிலோ எடை உள்ள தங்க ஆபரணங்களைக்கொண்டு இந்த விநாயகர் உருவம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க நகைகளின் மதிப்பு இன்றைய நிலவரப்படி 10 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய்” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தங்க ஆபரணங்களால் செய்யப்பட்டுள்ள விநாயகர் உருவம் பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.