ஒரு மழை வெள்ளம் !  இரண்டு பிரதமர்கள் !!

Untitled-4

ண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.

வல்லரசு நாடான இங்கிலாந்தில் மழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதனை பிரதமர் கமரோன் வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிட்டுள்ளார்.

சென்னை வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து வெள்ளத்தில் ஒருவர்கூட இறக்கவில்லை.

சென்னை வெள்ளத்தில் ஜெயா அம்மையாரின் உத்தரவிற்காக அதிகாரிகள் காத்து இருந்ததால் செம்பரபாக்கம் அழிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் பிரதமரே நேரடியாக சென்று உத்தரவுகளை வழங்குகின்றார்.

சென்னையில் மக்கள் வழங்கிய உதவி பொருட்கள் மீது “அம்மா” ஸ்டிக்கர் ஒட்டி அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் இங்கிலாந்தில் அரசே முழு நிவாரணத்தை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல அதில் பிரதமர் கமரோன் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை.

இந்தியா வெறுமனே வல்லரசு கனவு கண்டால் மட்டும் போதாது!

Balan Chandran,  London

Leave a Reply

Your email address will not be published.