ஓபிஎஸ் முதல்வர்

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா வாகனம் போயஸ் கார்டன் செல்ல ஆய்தமாகவுள்ளது

இன்று இரவு 11:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதயம் செயலிழந்ததால் காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை வெளியித்துள்ளது. அதை தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தின் முன்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாகனம் போயஸ் கார்டன் செல்ல ஆய்தமாகவுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவரது இல்லம் வரை ஆயிரத்திற்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேளையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முடிவு செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாக சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் அடுத்த முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.